வயநாடு நிலச்சரிவு பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவு பேரிடலில் தேடுதல் பணி 7 வது நாளை எட்டியுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. அடையாளம் காண முடியாத சடலங்கள் உடல் பாகங்கள் இன்று மொத்தமாக அடக்க்ம செய்யப்பட உள்ளன.
கேரளம் மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், வய நாட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில், சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட 3 கிராமங்கள் உருதெரியாமல் அழிந்தன.
இதுவரை பலியானோர் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 200க்கும் மேற்பட்டோர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், வயநாட்டைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் ஜிசா. இவர் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில் நிலச்சரிவில் காணாமல் போனார். எனவே இவரை தேடி வந்த நிலையில், ஒரு கை கிடைத்தது. அதில், திருமண மோதிரமும், தனது கணவரின் பெயரை பச்சை குத்தியிருந்ததை வைத்து தந்தை ராமசாமி உறுதி செய்துள்ளார்.
மகளின் உடல்கள் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அந்தக் கையை மட்டும் வைத்து அவர் இறுதிச் சடங்குகள் செய்தார்.