நலம்விரும்பிக்கு
உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளும் எதாவது ஒருவகையில் தங்கள் இருப்பைப் பூமியில் தடம் பதித்துத் தக்க வைக்கவும், உயிர்வாழவும் வேண்டி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
வாழ்வில் சந்தோசமான தருணம் என்றால் அது போராடிக் கிடைக்கும் வெற்றியின் களிப்புதான்.
நட்சத்திர முட்பாதைகளைக் கடந்து அழகு நிலா வானுலகில் வட்டமடிப்பதைப் போன்று நம் வாழ்விலும் எதாவது ஒரு சூழலில் எதாவது ஒரு தருணத்திலும் எதாவதொன்று எதிர்பாராததென நமக்கு வருவது வெகு இயல்பானது.
ஒரு நாள் என்பது ஒவ்வொரு ஜீவராசிக்குமே சவால் நிறைந்தது என்றாலும் அந்த நாளில் அவைகள் எப்படி தம் நேரத்தையும் போராட்டத்திற்கான பாதையும், அடுத்த நாள் விடியலுக்காகக் காத்திருப்பதையும் சந்திப்பதுதான் பெரிய ஆச்சர்யமே. இதில் மனிதனும் அடக்கம்.
காடுகளில் பாடித் திரியும் தனிமை விரும்பியான குயிலின் கீதம், தான் அனுபவித்த இயற்கை அழகினைத் தன் குரலில் பாவித்து அதை உலகிற்கே அறிவிப்பதைப் போல சக உயிர்களையும் அதைக் கேட்டின்புறும்படி செய்கிறது.
ஓடும் நதியும் தேடும் மனமும் நொடியும் தெளிவு கொள்வதைப் போல இவ்வாழ்வில் நம் அறிவுவிருத்திக்கும், ஆயுளுக்கும் கடவுளைச் சரணடைவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருப்பதைப் போல அன்பின் வழி மேவும் இவ்வாழ்க்கைக்கு அனைத்தும் ஆகர்சம் தான்.
’’அனைத்தையும் அனுபவித்துப் பார்’’ என்று சொன்ன கண்ணதாசனின் வார்த்தைகளில் மானிட மொத்த வாழ்க்கையின் சாரம்சமும், கிருஷ்ணன் அர்ஜூனருக்கு அருளிய கீதையின் கவிதை வரிகளைப் போலவும், பைபிளின் பிரசங்கியின் பிரசங்க வசனத்தைப் போலவும் இருப்பதை மறுக்க முடியாது.
வெற்றுக் காகிதப் பரப்பின் மீது விழும் பேனாவின் மைத்துளியைப் போல வாழ்வெனும் வானில் பொங்கிப் பிரவகிக்கும் எண்ணமெனும் மேகங்கள் சூழ்ந்த மனிதனுக்கு அவன் சந்திக்க நேர்கின்ற சம்பவங்களைப் பொறுத்து, வெற்றி தோல்வியென்பது இயல்பானது.
நம் புன்னகையின் வீரியத்தின் ஆயிரம் சோர்வுச் சடைகளை பின்னலெடுப்போம். வைராக்கியம் எனும் முரசு கொண்டு அகிலத்தின் காதுகளில் நம் வெற்றிக் கொள்கைகளை கட்டியங்கூறுவோம்.
செல்லும் பாதையோ கரடு-முரடானது என்றாலும் தேர்ந்தெடுத்தது நாம் தான் எனும் போது, கீழே பரந்துவிரிந்து கிடக்கும் மண்ணில் ஒட்டியுள்ள ஒவ்வொரு மண் துகளும்கூட நம் கண்ணில்படும் நட்சத்திரப் பருக்கைகளுக்கு நிகரானது என்று உள்ளத்தில் திடம் கொள்வோம். அதன் சிற்றொளி பேரொளியாக மாறி, மனதில் ஒளிந்துள்ளா ஓர் ஆற்றலை அது ஓராயிரம் ஆற்றல்களாக உண்டாக்கித் தரும்.
உலகம் ஆயிரம் வெற்றிக் கோட்டைகளைக் கட்டியெழுப்பியுள்ளது. இவையெல்லாம் அகிலத்தில் நாம் நம் செயல்களை வீரியப்படுத்தி, இங்கே உலாவுகின்ற பல வாய்ப்புக் குதிரைகள் மீதேறி அதன் கதவுகளைத் திறமையெனும் சாவியின் மூலம் திறக்கத்தான்.
சினோஜ்
2)03)25)
வெற்றிக் கோட்டை – சினோஜ் கட்டுரைகள்
'Victory Fort' Sinojkiyan Motivation Article
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment