மக்களிடம் இருந்து பெறப்படும் திரள் நிதியில் சீமான் மட்டும்தான் வளர்ந்து இருக்கிறார் என்று நாம் தமிழர் கட்சி வளரவில்லை என்று நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து, புரட்சி தமிழர் கட்சி தொடங்கியுள்ள ராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் புரட்சித் தமிழர் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர். இதற்கான கொடியையும் இன்று வெளியிட்டனர்.
இதையடுத்து, பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது: உலகத்தமிழர்களின் திரள் நிதியின் மூலம் சீமானுக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கிறது. அவரது பெயரில் மற்றும் மனைவியின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கி வைத்துள்ளார்.
Also Read:மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும்!- சீமான்
2011 ஆம் ஆண்டு சசிகலாவிடம் ரூ.11 கோடியை சீமான் வாங்கினார். தேர்தல் காலங்களில் பல கட்சிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேட்பாளரை அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.