நடிகர் விஜய் நடித்த ’தி கோட்’ படத்திற்கு சென்னையில் இன்னும் புக்கிங் தொடங்கவில்லை என தகவல் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி கோட். இப்படத்தின் 3 சிங்கில் பாடல்கள், டிரைலர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
சமீபத்தில் இப்படத்தில் 4வது சிங்கில் மட்ட என்ற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
Also Read : விஜயின் ‘தி கோட்’ படத்தின் 4வது சிங்கில் ரிலீஸ்!
இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தி கோட் படத்திற்கு சென்னையில் இன்னும் புக்கிங் தொடங்கவில்லை என தகவல் வெளியாகிறது.
திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் இடையே டெர்ம்ஸ் உறுதி செய்வதில் இழுபறி எனத் தகவல் வெளியாகிறது.
Also Read : அஜித்தை மறக்காத வெங்கட்பிரபு…தி கோட் 4வது சிங்கில் அப்டேட்!
மல்டி பிளக்ஸ் தியேட்டர்களுக்கு 60 % ஸ்டேண்டர்ட் என்பதால் அங்கு மட்டும் முன்பதிவு தொடங்கியுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தைவிட கூடுதலாக 5 % -பங்கு கேட்டு விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 65% வி நியோகஸ்தர்களுக்கும்,. 35% தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பங்கு எனப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில் தியேட்டர்களில் எப்போது தி கோட் பட புக்கிங் தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read : தி கோட் படத்தின் பாடல் பற்றி விஜய் என்ன சொன்னார்?