
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட்டுவிட்டார்கள். மாணவர்கள் குதூகலாமாய் இந்த கோடை விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்தக் கோடைகாலத்தைல் நம் உடலையும், நம் குழந்தைகள் உடல் நலத்தையும் எப்படி பேணுவது என்பதைப் பார்க்கலாம்.
அதிகாலையில் இருந்து சின்ன சின்ன பயிற்சிகள் செய்து வெயில் மேலெழுவதற்கு முன் வீட்டிற்கு அடைக்கலமாவது நலம்.
Also Read நாம் எப்படி இருக்க வேண்டும்! சினோஜ் கட்டுரைகள்
இந்த வெயில் பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாக்க, மதிய வேளைகளில் பயணங்களையும்,விளையாட்டுகளையும், வெளியே செல்வதையும் தவிர்க்கலாம்.
சுத்தமான குடி நீரை அடிக்கடி பருகி வரலாம். பசியெடுத்த பின் சாப்பிடலாம். குளிர்ச்சியான பானங்களும் எடுத்துக் கொள்ளலாம்.
Also Read வாழ்க்கையில் ’’உறவுகள் மேம்பட -சினோஜ் கட்டுரைகள்
கோடை காலத்தில் தினமும், தக்காளி, வெள்ளரி, தர்பூசணி எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடல் சூடு தணியும், உணவு எளிதில் ஜீரணமாகும். உடல் சூட்டினால் வயிற்றுக் கோளாறு பிரச்சனைகளும் நீங்கும்.
Sinojkiyan