
kkr vs rcb ipl 2024
ஐபிஎல்-2024 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு விளையாடியது.
இன்று மாலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி கேப்டன் டூ பிளசிஸ் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
எனவே கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த அணியில் பெர்குசனின் 48 ரன்னும், வெங்கடேஷ் ஐயர் 16ரன்னும், சிங்கு சிங் 24 ரன்னும், ஸ்ரேயாஸ் ஐயர் 50ரன்னும் அடித்தனர். இதில், 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது.
ஆர்பிசி தரப்பில், யாஷ் தயாள் மற்றும் கேம்ரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
223 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணியில், பிரபுதேஷாய் 24 ரன்னு, கோலி 18 ரன்னும் அடித்தனர். தினேஷ் கார்த்திக் 19 வது ஓவரின் கடைசி பந்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இதனால் ஒரு ஓவருக்கு 21 ரன்கள் தேவை என்ற இலக்கு இருந்தது.
இதில், ஸ்டார்க் வீசிய பந்தில் முதல் நான்கு பந்துகளில் கரன் சர்மா 3 சிக்சர்ஸ் அடித்து, அணிக்கு உதவினார்.
இதனால் 2 பந்துகளில் 3 ரன்கல் தேவை என்ற நிலையில், 5வது பந்தில் கரன் சர்மா ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
கடைசிப் பந்தை பெர்குசன் எதிர்கொண்ட நிலையில், அவர் டீப் எக்ஸ்ட்ரா திசையில் அடித்து 2வது ரன் ஓடும்போது அவுட்டானார்.
இதனால் ஆர்சிபி அணி 1 ரன்னில் தோற்றது. இத்தோல்வியால் அந்த அணி இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
கொல்கத்தா த்ரில் வெற்றி பெற்றது.
ரஸ்ஸல் 3 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
SinojKiyan