கள்ளக்குறிச்சி நகரமான மந்தைவெளி பகுதியில் பிரசித்திபெற்ற ஶ்ரீ முத்துமாரியம்மன்கோவில் தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது- திரளான மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு கடந்த12 ஆம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தினந்தோறும் பாரதம் படித்தல் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன மேலும் முத்துமாரிஅம்மனுக்கு கூழ் வார்த்தல் ஆரியமாலா காத்தவராயன் திருக்கல்யாணம் அம்மன் வீதி உலா கழுமரம் ஏறுதல் காலி கோட்டை இடித்தல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியான இன்றுதேரோட்டம் நடைபெற்றது முன்னதாக அம்மனுக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் உள்பட பல்வேறு வகையான நருமணப் பொருட்களைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு பூஜை செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன்எழுந்தருளி காட்சியளித்தார் அப்போது அங்கு இருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அலங்கரிக்கப்பட்ட தேர் கிராமத்தில் முக்கிய வீதியின் வழியாக சென்று மீண்டும் கோவில்நிலையம் வந்தடைந்தது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவில் பங்கேற்ற சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது…
ஶ்ரீ முத்துமாரியம்மன்கோவில் தேர் திருவிழா
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஎம்.ஆர். விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
Keep Reading
Add A Comment