Author: Cineyukam-Admin

*திண்டுக்கல்லில் வெடிகுண்டு துப்பறியும் லீமா என்ற நாய் 8 ஆண்டுகள் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றது.**பணி ஓய்வு பெற்ற துப்பறியும் நாய்கள் கடைசி வரை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி – திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பேட்டி*திண்டுக்கல், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் துப்பறியும் நாய் படை பிரிவில் பணிபுரிந்த லீமா என்ற நாய் பணி நிறைவு விழா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் இன்று நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மோப்பநாய் லீமாவிற்கு மாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து நன்றியை தெரிவித்தார். இதுகுறித்து திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது,”திண்டுக்கல் துப்பறியும் நாய் பிரிவில் நான்கு துப்பறியும் நாய்கள் உள்ளன இதில் 2 நாய்கள் வெடிகுண்டு மோப்ப நாய்களாகவும் 2 நாய்கள் குற்றச் செயல்கள் கண்டுபிடிக்க கூடிய மோப்ப நாய்களாகவும் பயிற்சி அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு…

Read More

பல்லாவரத்தில் பொது இடத்தில் தவறாக நடந்து கொண்ட வடமாநில இளைஞருக்கு தான் அணிந்திருந்த செருப்பை கழட்டி ஆவேசமாக எச்சரித்து விரட்டி அடித்த பெண்மணி.சென்னை அடுத்த பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர் இளைஞரை நோக்கி தனது செருப்பை கழட்டி கொண்டு ஆவேசமாக அடிக்க பாய்ந்தது அந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்படுத்தியது.பல்லாவரம் பூந்தமல்லி செல்லும் பம்மல் நெடுஞ்சாலையில் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இந்நிலையில் அங்கு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பெண்மணியை வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தகாத முறையில் சீண்டியுள்ளார்.சீண்டியது மட்டும் அல்லாமல் அவரை தவறாக பேசி உள்ளார்.இதை கண்டு கொதித்து எழுந்து அந்த பெண்மணி தனது காலில் அணிந்து இருந்த செருப்பை கழட்டிக்கொண்டு அந்த வாலிபரை ஆவேசமாக தாக்க முற்பட்டு விரட்டி அடித்துள்ளார்.பின்னர் அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அந்த பெண்மணி சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி…

Read More

பொள்ளாச்சி அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.பொள்ளாச்சி வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் ஆழியாரை அடுத்து மலையடி வாரத்தில் அமைந்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஆழியார் அதன் சுற்று வட்டார பகுதி சிற்றாடைகளில் இருந்து வரும் நீர் வரத்தால் ஆற்றுக்கு நேற்று நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலுக்கு அதிகளவு வழிபாடு செய்ய வருகை புரிவார்கள் இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

சாலையில் கொட்டிக் கிடந்த ஜல்லி கற்களை இரவோடு இரவாக சுத்தம் செய்த போக்குவரத்து காவலர்கள். நெகிழ வைத்த சம்பவம். ஈரோடு அடுத்த காளை மாடு சந்திப்பில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. ரயில்வே நுழைவு பாலம் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன இதனால் அவ்வப்போது தார் சாலை பழுதடைந்து விபத்து ஏற்படும் அபாயம் நிலவும். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் சார்பாக உடனடியாக பழுது பார்த்து போக்குவரத்து தடையின்றி நடைபெறும். அதன்படி நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பாக ஜல்லி கல்லுகள் கொட்டப்பட்டிருந்த நிலையில் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டி இரவோடு இரவாக தாங்களாகவே சுத்தம் செய்தது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Read More

இந்த வீட்டில் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இந்த லட்சணத்தில் சி சி கேமரா எதற்கு. குடித்த தண்ணீருக்கு இருபது ரூபாய் வைத்து செல்கிறேன். எடுத்து கொள் என்று திருட சென்ற வீட்டில் சி சி கேமரா முன் சைகை காண்பித்து சென்ற திருடன்.தெலுங்கானா மாநிலம் ரங்காராநட்டி மாவட்டத்தில் உள்ள மகேஸ்வரம் நகரில் இருக்கும் ஒரு வீட்டிற்கு நேற்று இரவு முகமூடி, தலையில் தொப்பி ஆகியவற்றை அணிந்த ஒரு திருடன் திருடுவதற்காக சென்றான்.வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடன் வீடு முழுவதும் தீவிரமாக தேடி பார்த்தும் திருடனுக்கு அந்த வீட்டில் ஒன்றும் கிடைக்கவில்லை.அதேபோல் பணமாக ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை.இதனால் மன வேதனை அடைந்த அந்த திருடன் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா முன் வந்து ஒரே ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இந்த லட்சணத்தில் வீட்டில் சிசிடிவி கேமரா எதற்காக பொருத்தி இருக்கிறீர்கள் என்று கேட்பது போல் சைகை…

Read More

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மீண்டும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு – சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த கேட்ட அனுமதி நிராகரிப்பு.கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக பதிவு செய்ததாக கரூர் சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில், பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 22-ஆம் தேதி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரை இரண்டு நாள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த 2 நாள் விசாரணை முடிந்து நேற்று கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே பிரகாஷ்…

Read More

மேட்டுப்பாளையம் அருகே கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியில் கோவை புத்தக திருவிழாவை ஒட்டி மாணவர்களிடம் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி புத்தகம் வாசித்தனர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் கோவை மாநகரத்தில் அடுத்த வாரம் புத்தக திருவிழா நடைபெற உள்ளது இதில் அணைவரும் பங்கேற்று தமிழரின் பாரம்பரிய நூல்கள், இதிகாச கதைகள், ஆன்மீக புத்தகங்கள் சிந்தனை கவிதைகள் ,தண்ணம்பிக்கை நூல்கள் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புத்தக படைப்புகள் அரங்குகளை அலங்கரிக்கப்பட உள்ளது அதன் ஒரு பகுதியாகவும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியில் புத்தக வாசிப்பை ஊக்கிவிக்கும் வகையிலும் மாணவர்களிடையே புத்தகங்களை எழுதும் ஆற்றலையும் சுய சிந்தனைகளை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆயிரம் மாணவர்கள் புத்தகங்களை வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது…

Read More

வடமதுரை அருகே ஏ.டி.எம் எந்திரத்தை ட்ரிலிங் மிஷின் கொண்டு அறுத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி – சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள மூனாண்டிபட்டி பகுதியில் ஏராளமான தனியார் நூற்பாலைகள் மற்றும் எண்ணெய் ஆலைகள் உள்ளன. இதில் பணி புரியும் தொழிலாளர்கள் பணம் எடுப்பதற்காக வடமதுரையில் செயல்படும் தனியார் வங்கியின் ஏ.டி.எம் அறை மூனாண்டிபட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் (ஜூலை 24) அதிகாலை 3 மணியளவில் முகத்தில் துணியை சுற்றியபடி வந்த மர்ம நபர்கள் 2 பேர் ட்ரிலிங் மிஷினைக் கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை அறுக்க முயற்சி செய்துள்ளனர். நீண்ட நேரம் முயற்சி செய்தும் எந்திரத்தை அறுக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனை அங்கிருந்த கண்காணிப்பு கேமரா வழியாக பார்த்த வங்கி மேலிட அதிகாரிகள் இது குறித்து வடமதுரை வங்கிக் கிளைக்கு தகவல் தெரிவித்தனர். வடமதுரை கிளை மேலாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் சம்பவ…

Read More

வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு ஆலயம் முழுவதும் ஒரு லட்சம் வளையகளால் விழாக் கோலம்.ஆடி வெள்ளி என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபுரம் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய ஒரு லட்சம் வளையினால் மூலவர் வேம்பு மாரியம்மன் மற்றும் ஆலய முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு இன்று நடைபெற்றுள்ள வளையல் அலங்காரத்தை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் காலை முதல் ஆலயம் வரை தொடங்கி தற்போது நீண்ட வரிசையில் இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அதை தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

Read More

டூ வீலரில் ஹாயாக பயணம். பேலன்ஸ் தவறாமல் அமர்ந்து சென்ற டேனிதிருப்பூர் அனுப்பர் பாளையம் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருபவர் சித்ரா. இவர் ஆசையாக வளர்த்து வரும் நாய் டேனிக்கு 6 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், சித்ரா தனது கடைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க மார்கெட் செல்வது வழக்கம். சித்ராவை விட்டுப் பிரியாத அவரது செல்ல நாய் டேனி, அவரது இரு சக்கர வாகனத்தின் பின் சீட்டில் தானாகவே ஏறி அமர்ந்து சமர்த்தாக உடன் பயணிக்கிறது.சாலைகளில் செல்லும் வாகனத்தின் பின் சீட்டில் ஆடாமல், அசையாமல் அழகுற பயணிப்பது காண்போரை அதிசயமாக பார்க்கும் வகையில் உள்ளது. சிக்னல்களில் வண்டி நின்றால் ஆடாமல், அசையாமல் அமர்ந்திருக்கும் டேனி. வாகன இன்ஜினை ஆப் செய்தால் மட்டுமே வாகனத்தை விட்டுக் கீழே இறங்குகிறது. திருப்பூர் நகரில் வாகனத்தில் டேனி அமர்ந்து செல்வதை வாகன ஓட்டிகள், குழந்தைகளும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Read More