கரூரில் அருள்மிகு கல்யாண பசுபதிசுவரர் ஆலயத்தில் 63 நாயன்மார்களின் 28 ஆம் ஆண்டு திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் 63 நாயன்மார்கள் 28 ஆம் திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 63 நாயன்மார் குருபூஜை விழாவை ஒட்டி 28- ஆம் ஆண்டு 63 நாயன்மார்களுக்கும், கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாயகி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று இரவு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய வாசலில் கல்யாண பசுபதீஸ்வரர் ,அலங்காரவல்லி வெள்ளி ரிஷப வாகனத்திலும், சௌந்தரனாகி வெள்ளி ரிஷிப வாகனத்திலும் மற்றும் வெள்ளி எலி வாகனத்தில் கணபதியும், வெள்ளி மயில் வாகனத்தில் முருகன் வள்ளி, தெய்வானுடனும் திருவீதி உலா காட்சியளித்தனர்.
ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தனர்.
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 63 நாயன்மார் குருபூஜை விழாவில் சுவாமி திருவிதி உலா கோயில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வந்து பின்னர் அண்ணா வளைவு, ஜவகர் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா மீண்டும் கோவிலை வந்தடைந்தது இந்நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் மேல தாளங்கள் உடன் ஆலயம் வலம் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்யாண பசுபதிசுவரர் ஆலயத்தில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஎம்.ஆர் விஜயபாஸ்கருக்கு வருகின்ற 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
Keep Reading
Add A Comment