கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத திருமஞ்சனத்தை முன்னிட்டு சுவாமி நடராஜர் அம்பிகையுடன் திருவீதி உலா.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமணஞ்சத்தை முன்னிட்டு இன்று புகழ்ச்சோழர் மண்டபத்தில் அருள்மிகு நடராஜர்- அம்பிகை உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக இன்று இரவு ஆலய மண்டபத்திலிருந்து அருள்மிகு ஸ்ரீ நடராஜர் மற்றும் அம்பிகையுடன் சிறப்பு ரத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
ஆலயத்திலிருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்ட அருள்மிகு ஸ்ரீ நடராஜமூர்த்தி -அம்பிகை திருவீதி உலா ஆலய கிழக்கு வாசல் வழியாக வந்து,தெற்கு வாசல், மேற்கு வாசல், வடக்கு வாசல் வழியாக திருவீதி உலா காட்சி அளித்த பிறகு மீண்டும் கிழக்கு வாசல் வழியாக ஆலயம் வந்தன.
ஆலயம் வந்து அருள்மிகு ஸ்ரீ நடராஜமூர்த்தி சுவாமி மற்றும் அம்பிகைக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, தொடர்ச்சியாக திருவீதி விழா சிறப்பாக நிறைவு பெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடைபெற்ற நடராஜமூர்த்தி அம்பிகை திருவீதி உலாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
சுவாமி நடராஜர் அம்பிகையுடன் திருவீதி உலா
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleசீமானுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கும் இல்லை- அமைச்சர் முத்துச்சாமி
Next Article 7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு !
Keep Reading
Add A Comment