சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு 10 டன் வண்ண வண்ண வாசனை மலர்களால் பூச்சாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர்
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அருள் மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில், மிகவும் பழமை வாய்ந்ததும் மிகவும் பிரசித்திபெற்ற இந்த திருகோவிலில் உள்ள அம்மனை வழிபட்டு சென்றால் வேண்டியதை வேண்டியபடி தருவது கோட்டை மாரியம்மனின் சிறப்பு. சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் மிகப் பெரிய அம்மன் என்று அழைக்கப்டுவது இந்த கோட்டை மாரியம்மனை மட்டுமே, பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த திருகோவிலில் ஆடி மாதத்தில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம்,
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடித்திருவிழா கோட்டை மாரியம்மன் க்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு கோட்டை மாரிஅம்மனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் பந்த கால் வைபவம் நடைபெற்றது இதனை தொடர்ந்து இன்று பூ சாட்டுதல் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் 10 டன் எடையுள்ள அரளி சாமந்தி ரோஜா உள்ளிட்ட ஏராளனமான வாசனை பூக்களை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்னர் திருக்கோவிலை வந்தடைந்தனர் இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அர்ச்சனைகளும் செய்யப்பட்டன,
இதனை தொடர்ந்து அம்மனுக்கு ஜண்டை மேள தாளங்கள் முழங்க அம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து திருக்கோவில் பூசாரி பூக்களை வாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர் சேலம் மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர் இதனால் பூக்களுக்கு நடுவே அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர் திருவிழா துவங்கும் முன் பூசாடுதல் நிகழ்ச்சி நடைபெறுவதால் வேண்டியதை தரும் நாயகியை காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். இந்த பூச்சாட்டுதல் நிகழ்ச்சி முடிந்து அடுத்த வாரத்தில் திருவிழா துவங்கும்
சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய அம்மன் திருக்கோயில் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் ஆடி மாதத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் திருக்கோயில்களில் திருவிழா நடைபெறும் கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நடைபெற்ற பின்னர் மற்ற கோவில்களின் நிர்வாகிகள் கோட்டை மாரியம்மனிடம் பூக்களை கொண்டுவந்து அம்மனிடம் காண்பித்த பிறகுதான் மற்ற மாரியம்மன் திருக்கோயில்களில் பூட்சாட்டுதல் வைபவம் நடைபெறும் எனபது குறிப்பிடத்தக்கது.
விழாவின் ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழா
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment