எகிப்தை சேர்ந்த மக்டி ஈசா 7 நாட்களில் 7 உலக அதிசயங்களையும் பார்வையிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த உலகில் உள்ள அதிசயங்களை எல்லாம் சுற்றி பார்க்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவாக உள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தன்னுடைய ஜீன்ஸ் படத்தில் ஒரே பாடலில் ஏழு உலக அதிசயங்களை வைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இது எல்லோருடைய கனவாக இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே தங்கள் வாழ்நாளில் இதை சாதிக்கிறார்கள்.
இந்த நிலையில்,எகிப்தை சேர்ந்த மக்டி ஈசா!.
7 நாட்களில் 7 உலக அதிசயங்களையும் பார்வையிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இவர் சுமார் 6 நாட்கள், 11 மணிநேரம், 52 நிமிடங்களை எடுத்துக்கொண்டுள்ளார்.
இதற்காக ஒன்றரை ஆண்டுகளாக திட்டமிட்டதாக இவர் தெரிவித்துள்ளார்.
இவர் தனது பயணம் முழுவதும் பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்