
ஐடிசி எனும் இண்டர்நேசனல் டேட்டா குரூப் அமைப்பு தொழில் நுட்பத்துறை சார்ந்த தரவுகளை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, ஐடிடி அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 7.8 சதவீதம் உயர்ந்திருப்பதாக அறிவித்துள்ளது.
மொத்தமாக 289.4 மில்லியன் செல்போன்கள் கடந்த ஜனவரி- மார்ச் காலகட்டத்தில் ஏற்றுமதியாகியுள்ளது எனவும், இதில் சாம்சங் நிறுவனத்தின் பங்கு மட்டும் 20.8 சதவீதமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஐ போன் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு 17.3 சதவீதமாக சரிந்துள்ளது.
இதன் காரணமாக உலகளவில் நம்பர் 1 ஸ்மார்ட் போன் பிராண்டாக வலம் வந்த ஆப்பிள் தற்போது 2 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் முதலிடத்திற்கு வந்துள்ளது. 3வது இடத்தில் சீனாவின் முன்னணி நிறுவனமான ஜிரோமி உள்ளது. அதன் சந்தை பங்கு 14.1 சதவீதமாக உள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில், சாம்சங் நிறுவனம் 60 மில்லியன் செல்போன்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், ஆப்பிள் நிறுவனம் இதே காலக்கட்டத்தில் 50.1 மில்லியன் ஐபோன்களை சந்தைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஜனவரியில் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்தை பறித்த நிலையில், தற்போது சாம்சங் மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களிடையே போட்டி தொடரும் என தெரிகிறது.
#EditedBySinoj
மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு @cineyukam பக்கத்தை follow செய்யுங்கள்….