
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது.
இதில். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்தியாவின் ரோகித் சர்மா 47 ரன்னும், கோலி 117 ரன்னும், சுப்மன் கில் 80 ரன்னும், ஸரேயாஷ் அய்யர் 105 ரன்னும் அடித்தனர்.
எனவே இந்திய அணி 50 ஓவர்களில் நான்கு கட்டுகளை இழந்து 397 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 398 என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்கியது.

இதில், கான்வே 13 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 13 ரன்னும் வில்லியம்சன் அரைசதம் அடித்து 69 ரன்னும் எடுத்தார். மிட்செல் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 85 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து விளையாடிய நிலையில், 134 ரன்னில் அவுட்டானார். பிலிப்ஸ் 41 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் ஷாமி 3 விக்கெட் கைப்பற்றியுள்ளார். யாதவ் , பும்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினனர்.
நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எனவே கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தோற்றதற்கு இன்றைய போட்டியில் நியூசிலாந்தை பழித்தீர்த்தது இந்திய அணி.

நினைத்து போன்றே இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால் இந்தியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.