
கேரளம் மா நிலத்தில் முதல்வர் பினராயி விஜய் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு பாலக்காடு அருகே தண்டவாளத்தில் கால் நடைகள் மீது ரயில் மோதியதில் ரயில் தடம்புரண்டதாக தகவல் வெளியாகிறது.
கேரளம் மாநிலத்தில் பாலக்காடு அருகே நிலாம்பூர் சாலை ஷோரனூர் விரைவு ரயில் பாலக்காடு மாவட்டம் வல்லப்புழா பகுதியில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
அந்த தண்டவாளத்தில் இருந்த கால் நடைகள் மீது ரயில் மோதி தடம்புரண்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் குறிப்பிடவில்லை. பயணிகள் காயமடைந்தார்களா என்ற தகவலும் கூறவில்லை.
விரைவு ரயில் தடம்புரண்ட நிலையில், அப்பகுதியில் அதே வழிதடத்தில் வரவுள்ள அ மற்றொரு ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது விபத்து நடத்த பகுதியில் சீரமைப்பு நடந்து வருகிறதாக தகவல் வெளியாகிறது.