இயக்குனர் அட்லி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜவான் இப்படத்தில் நயன்தாரா பிரியாமணி விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் ஹீரோவாக நடித்த ஷாருக்கானுக்கு Iifa -2023 திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், “எனக்கு சினிமாவைப் பற்றி பல பாடங்களை எடுத்துரைத்த மணிரத்னத் திற்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.
இந்த விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. எனக்கு விருதுகளை மிகவும் பிடிக்கும். சொல்லப் போனால், நான் விருதுகளுக்கு பேராசைப் படுவேன்.
என்னுடன் இந்த பிரிவுக்கு நாமினேட்டாகி இருந்த ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், விக்ரந் மாசி, விக்கி கௌஷல், சன்னி தியோல் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள்; அனைவரும் இந்த விருதுக்கு
தகுதியானவர்கள்தான்” என்று தெரிவித்துள்ளார்.


