இந்தியாவில் விவசாயிகளை விட மாணவகள் அதிகம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
தேசியக் குற்ற ஆவண பதிவேடு மூலம் கிடைத்த தகவல்களை வைத்து ஐசி3என்ற தொண்டு நிறுவனம் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் ஆண்டுதோறும் 2 சதவீதம் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. இதில், 4 சதவீதம் பேர் மாணவர்கள். இது விவசாயிகளின் எண்ணிக்கையை விட அதிகம். 0.24 வயதுள்ளவர்களின் எண்ணிக்கை 58.2 கோடியில் இருந்து 58.1 கோடியாக குறைந்துள்ளது.
இந்த வயதில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 6,654-ல் இருந்து, 13,044 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக 15வயதிலிருந்து 24 வயதுள்ள இளம் வயதினரில் 7-ல் ஒருவர் மன அழுத்தம் ஆர்வமின்மை ஆகியவற்றால் மோசமான மன நிலையில் உள்ளனர்.
இவர்களில் 41 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். 2021-ல் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 13, 089 ஆக இருந்தது. இது 2022 -ல்13,044 ஆக அதிகரித்தது.
மாணவிகளை விட மாணவர்கள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மஹாராஷ்டிரா, தமிழகம் மற்ரும் ம.பி., ஆகிய மாநிலங்களில் தற்கொலை செய்வோரில் 3-ல் ஒருவர் மாணவர்களாக உள்ளனர்.
தமிழகம் மற்ரும் ஜார்கண்டில் ஆண்டுதோறும் 14- 15 % மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும், இப்பட்டியலில், உத்தரப்பிரதேசம் மா நிலம் முதலிடத்தில் உள்ளதாகவும், ராஜஸ்தான் 10 வது இடத்தில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளை விட மாணவர்கள் அதிகம் பேர் தற்கொலை! ஆய்வில் தகவல்
By Sinojkiyan
India
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleவிபத்தில் சிக்கிய ’தங்கலான்’ பட நடிகர்!
Next Article மகனை காப்பாற்ற வேண்டி பிரியாணி போட்டியில் தந்தை!
Keep Reading
Add A Comment