கோயம்புத்தூர் மாவட்டம் ரயில் நிலையம் முன்பு, ரயில் பெட்டி வடிவில் ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் இதை குத்தைக்கு ஓட்டல் தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தால் அதில், அரை மணி நேரத்தில் ஆறு சிக்கன் பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இப்போட்டியில் கலந்துகொள்ள எந்தக் கட்டணமும் இல்லை.
அதாவது, 30 நிமிடத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு, 4 பிரியாணிகள் சாப்பிடுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு, 3 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் பரிசு என்று அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று போட்டி தொடங்கியதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீஸார் அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
இந்த நிலையில், ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட தன் மகனை காப்பாற்ற வேண்டி, தந்தை ஒருவர் இப்போட்டியில் கலந்து கொண்டார்.
அவர் கண்கலங்கியபடி போட்டியில் பங்கேற்று சாப்பிட்டு, 2 ஆம் இடம் பிடித்து, ரூ. 50,000 பரிசுத் தொகையை வென்றார்.