27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணிக்கு எதிரன ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் வாய்ப்பி நழுவவிட்டுள்ளது இந்திய அணி.
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலிலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றிப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று பிரேமதா மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இலங்கை அணி இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து, 50 ஓவர்கள் முடிவி 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரகள் எடுத்தது. அந்த அணியில், அவிஷ்கா பர்காண்டோ, கமிண்டே ஆகியோர்தலா 40 ரன்கள் எடுத்தனர். அடுத்து வெலாலகே 35பந்துகளில்39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து, 241ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, 64 ரன்கள், அரைசதம் அடித்தார்.
இதற்கிடையே இலங்கை பவுலர் ஜெஃப்ரி வாண்ட்டர்சேவின் சுழலை தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.
எனவே இந்திய அணி 42.2 ஓவர்களில் 10 விக்கெடுகள் இழப்பிற்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
இதன் மூலம் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இலங்கை அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணிக்கு எதிரன ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் வாய்ப்பி நழுவவிட்டுள்ளது இந்திய அணி.
கடைசியாக கடந்த 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை – இந்தியா ஒருநாள் தொடரை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. குறிப்பிடத்தக்கது.