33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா முடிந்து, போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் ஓட்டப் பந்தயத்தில் 0.005 நொடிகள் வெற்றியைத் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டியில், தங்கம் வென்ற அமெரிக்க வீரர் நோவா லைஸ்-ம், ஜமைக்காவின் தம்சனும்(9.79)ஒரே நொடிகளில் பந்தய தூரத்தை எட்டியிருந்தாலும், இருவருக்கும் இடையே 0.005 நொடிகள் வித்தியாசம் இருந்ததால், ஜமைக்காவின் தாம்சனுக்கு வெள்ளிப் பதக்கம் அறிவிக்கப்பட்டது.
பந்தயக் கோட்டை எட்டிய நொடியில், தாம்சனைக் காட்டிலும் நோவா எல்லைக் கோட்டின் தலை சற்றே முன்னோக்கி இருந்த புகைப்படங்கள் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.