தமிழ்நாட்டில் சுயதொழில் தொடங்குவதல் மற்றும் உற்பத்தித்துறையில் தமிழ் நாட்டின் ரூ.1 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி இலக்கிற்கு பெண்கள் பெரும் பங்காற்றுவதாக ஆய்வுகளில் தகவல் வெளியாகிறது.
இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 42% தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.
தமிழ் நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களின் சதவீதம் 35%தேசியசராசரியைவிட அதிகம் என்றும், தமிழ்நாட்டில் உள்ள 4,400 ஸ்டார்ட் அப்களில் குறைந்தது 1 பெண் ஆவது துணை நிறுவனராகப் பதவி வகிக்கிறார்.
5,500பெண்களுக்கு இந்த ஆண்டு கற்பனைத்திறன் மேம்பாடு,தொழில் தொடங்கப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமே பணிபுரியும் 5 தொழில் பூங்காக்கள் TANSIDCO –ஆல் நிறுவப்பட்டுள்ளது, பெண்கள் தொடங்கப்பட்ட 51 ஸ்டார்ட் அப்-கு TANSEED மூலம் நிதி வழங்கப்படுகிறது.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் 288 பெண்களுக்கு ரூ.62.87 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை தகவல் தெரிவித்துள்ளது.