கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென முக்கிய இடத்தைப் பிடித்துள்ளவர் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் பிரைன் லாரா. இவர், தன்னுடைய சாதனையை 2 இந்திய வீரர்கள் முறியடிப்பர் என்று தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பாவானுமான பிரைன் லாராவின் 400 ரன் சாதனை இன்னும் யாரலும் முறியடிக்கப்படாமல் உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பிரைன் லாரா படைத்திருந்தார். அதாவது ஒருமுறை 400 ரன்களும், மற்றொரு முறை 375 ரன்களும்.
இதற்கு முன்பு அதாவது 1994 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை டெஸ்டில் ஹேரி சோபர்ஸ் என்பவர் அடித்த 365 ரன்கள் என்பதுதான் முறியடிக்க முடியாத சாதனையாக இருந்தது.
இந்த நிலையில் 1994 ஆம் ஆண்டு பிரைன் லாரா இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, 375ரன்கள் அடித்து அந்தச் சாதனையை முறியடித்தார்.
அதன்பின், ஆஸ்திரேலியா வீரர் ஹைடன், ஜிம்பாவேக்கு எதிராக380 ர்ன்கள் அடித்து, லாராவின் சாதனையை முறியடித்தார்.
இதையடுத்து, 2004 ஆம் ஆண்டு பிரைன் லாரா இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, நிதானமாக விளையாடி 400 ரகள் குவித்து அசத்தினார்.
இவரது இமாலய சாதனை இன்று வரை யாராலும் முறியடிக்கவில்லை.
கிரிக்கெட்டில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் நிலையில், தற்போதைய வீரர்களில் யார் இந்த சாதனையை முறியடிப்பர் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பாவான் பிரைன் லாரா இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: இன்றைய காலத்தில் கிரிக்கெட் மிகவும் மேம்பட்டுள்ளது. அதனால் என்னுடைய 400 ரன்கள் சாதனையை நிச்சயம் இந்திய வீரர்களால் முறியடிக்க முடியும்.
இந்திய அணியின் இளம் வீரர்கள் சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இரு வீரர்களால் எனது 400 சாதனையை முறியடிக்க முடியும் என நம்புகிறேன். சரியான நேரமும் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்ய அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் என் சாதனையையும் முறியடிப்பர் என்று தெரிவித்துள்ளார்.
SinojKiyan