ராமநாதபுர மக்களவைத் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் கடந்த 2022 ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீசெல்வத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தார் ஓபிஎஸ். தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்டிருதார் ஓபிஎஸ்.
இத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையில், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 5,09,664 வாக்குகள் பெற்றதுடன், 1,66, 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்ரி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ் 3,42,882 ஓட்டுகள் மட்டுமே பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
இந்த நிலையில் ராமநாதரம் தொகுதியில் நவாஸ்கனி வெற்றி பெற்றத்டை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அதில், ராமநாதபுரம் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நவாச்கனி சொத்துக் கணக்கை முறையாகச் சமர்பிக்கவில்லை எனவும், கனி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 99,780 வாக்குகள் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sinojkiyan