அமெரிக்க நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.
இந்த நிலையில், முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வரும் நிலையில், இன்று கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் நாட்டில் செயற்கை நுண்ணறிவு( AI) ஆய்வகங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
ஏஐ ஆய்வகங்கள் மூலம் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் 20 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 செல்போன்களை விரிவுப்படுத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகிறது.