ஆலம் பழத்தை
உண்டு
ஆனந்த களிப்பில்
ஆடும்
அப்பறவைகளின்
ஒலியால்
நிரம்பி வழிகிறேன்.
அரச மர நிழலில்
மாம்பழ குரலில்
ஒரு பாடலை
அலைபேசி
உரையாடலில் தந்து விடுகிறாய்
அரச மர குளிரும்
மாம்பழ இனிப்பும்
ஆலம்பழ சிவப்புமாய்
ஆகி விடுவது
விளையாட்டல்ல
விதிகள்.
இலையா
மரமா
பழமா
இதயம்
ஒன்றிற்கொன்று போட்டியிட
நீயோ
இறைத்தபடியே
இருக்கிறாய்
இசைத்தபடியே
இருக்கிறாய்
இறைத்துகளை
இனிமை பொங்க.
சொல்லி விடேன்
இறைத் தாய்
நான் என.
அன்பும் காதலும்
விளையாட்டல்ல
இறை தாய் என.
-சித்தார்த்தா.
விளையாட்டல்ல விதிகள்- கவிஞர் சித்தார்த்தா
By Sinojkiyan
Poem
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleகூலி படத்தில் இணைந்த நாகார்ஜூனா !
Next Article ஆணுறை ஆர்டர் செய்பவர்களின் தரவுகள் லீக்!
Keep Reading
Add A Comment