சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் படம் கூலி.
இப்படத்தை சன்பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்களை படக்குழு அறிவித்து வருகிறது.
அதன்படி, இப்படத்தில் மலையாள நடிகர் சோபின் ஷாகிர் , தாயல் என்ற கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் பிறந்த நாலை முன்னிட்டு, கூலி படத்தில் சைமன் என்ற கேரக்டரில் நாகார்ஜூனா நடிக்கிறார் என்று போஸ்டர் வெளியிட்டுள்ளது படக்குழு.
இது வைரலாகி வருகிறது.