உழைப்புக்கு எதுவும் ஈடில்லை என்பதை சொந்தக் காலில் நின்று முன்னேறியபோதுதான் உணர முடியும். எதுவும் நமக்கு எளிதில் கிடைத்துவிடாது. எளிதில்கிடைப்பது எதுவும் நிலைத்துவிடாது.
கால மாற்றத்தின் தன்மையை அறிந்துணர வேண்டும். கவலைகளைப் புறந்தள்ள வேண்டும்.
வெற்றிக்கீதம் முழங்க, கஷ்டத்தின் பல்லவியைப் பாடித்தான் ஆக வேண்டும்.
அதன்பிறகுதான் மகிழ்ச்சியெனும் உச்சாணிக் கொம்பில் நாம் கொழுவீற்றிருக்க முடியும்.