மறைந்த பிரபல சினிமா பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெயரை அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்டி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.
சினிமாவில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலகம் முழுவதும் பிரபலமாக இருந்த மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் தன் குரல் வழியே பல்வேறு புதுமைகளை புகுத்தி இளைஞர்களையும் மக்களையும் கவர்ந்தார்.
இன்றும் திரைத்துறையில் இயங்கிக் கொண்டிருக்கிற இசையமைப்பாளர்கள் பாடகர்ளுக்கு முன்னோடியாக அவரது பாடல்கள் மற்றும் கலைப் பணிகளின் மூலம் இருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு எஸ் பி பாலசுப்பிரமணியம் இவ்வுலக வாழ்வை தொடர்ந்து மண்ணை விட்டு விண்ணிற்கு சென்றார்.
இந்த நிலையில் திரைத்துறையில் அவரது சாதனைகளையும் அவரது பெருமைகளையும் கௌரவிக்கும் பல வகையில், அவர் வாழ்ந்த சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் மெயின்ரோட்டிற்கு எஸ்பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் வெளியீட்டு இருந்தார்.
இதற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வரும் நிலையில், இசைஞானி இளையராஜா தன் சமூக வலைதள பக்கத்தில்,
என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முதல்வருக்கு நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment