சட்டவிரோதமாகப் பணம் பெற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்தாண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்தனர். இவ்வழக்கில் ஜாமின் பெற வேண்டி பலமுறை செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில் இதற்கு அமலாக்கத்துறை கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் செந்தில் பாலாஜியை பாராட்டி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தற்போது புழல் சிறைக்கு முன் செந்தில் பாலாஜியை வரவேற்க திமுகவினர் கூடியுள்ளனர். இந்த நிலையில், செந்தில் பாலாஜி விடுதலையாவதில் சிக்கல் உருவாகியுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குழப்பங்கள் உள்ளன என்று சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தெரிவித்துள்ளார்.
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment