கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவருக்கு பாலியல் ட்கொடுமை நடைபெற்றது. இந்த சம்பவத்தின் விளைவாக திரைப்பட ஷூட்டிங்கின் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் ஆய்வறிக்கை, அம்மாநில முதல்வரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஆய்வறிக்கை வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தில் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் பாலியல் அத்துமீறல் நடந்து வருவதாக ஹேமா குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி ஹேமா குழு அறிக்கைக்கு பின், மலையான சினிமாவில் பாலியல் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பாதிக்கப்பட்ட நடிகைகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அம்மா எனும் மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் சூப்பர் ஸ்டார் மோகன் லால் விலகினார்.
இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் மவுனம் கலைத்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின்போது அவர் பேசியதாவது:
கடந்த 47 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் இருக்கிறேன். நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. இங்கேதான் இருக்கிறேன்.
ஹேமா குழு அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டிற்குப் பதில்சொல்ல வேண்டியது ஒட்டுமொத்த மலையாள சினிமா உலகமும்தான்.
மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’ தான் சிறந்த திரைப்பட நடிகர் சங்கமாக செயல்பட்டது.
பாலியல் குற்றச்சாட்டுகளால் அம்மா என்ற மொத்த திரைப்பட நடிகர் சங்கம் சிதறிவிடக் கூடாது. ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரிவித்த புகார்கள் நடந்திருக்கலாம்.
ஹேமா குழு அறிக்கையில் உள்ள புகார்களின் அடிப்படையில் அம்மா சங்கத்தை மட்டும் விமர்சிப்பது சரியல்ல…ஹேமா குழு அறிக்கை அடிப்படையிலான விசாரணைக்கு குழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், மலையாள திரையுலகம், பாலிவுட் போன்று பிரமாண்டமானது அல்ல. கஷ்டப்பட்டு முன்னேறி வந்துள்ளது. சிதறிவிடக் கூடாது என்பதில் உறுதியாகவுள்ளேன்.
சாட்சியங்களுடன் புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவருக்கு பாலியல் ட்கொடுமை நடைபெற்றது. இந்த சம்பவத்தின் விளைவாக திரைப்பட ஷூட்டிங்கின் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் ஆய்வறிக்கை, அம்மாநில முதல்வரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஆய்வறிக்கை வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தில் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை- நடிகர் மோகன் லால்
By Sinojkiyan
Cinema
Actor Mohan Lal Hema Committee Hema Committee Report Malayalam Cinema Mohanlal Pinarayi Vijayan police investigation Sex Complaints Siniyugam Website Siniyugam.com சினியுகம் வெப்சைட் சினியுகம்.காம் பாலியல் புகார்கள் பினராயி விஜயன் போலீஸ் விசாரணை மலையாள சினிமா மோகன்லால் ஹேமா கமிட்டி ஹேமா குழு அறிக்கை
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous ArticleFORMULA 4 கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம்!
Keep Reading
Add A Comment