சென்னையில் பார்முலா 4 ரேஸிங் சர்கியூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் இன்று ( ஆகஸ்ட் 31 ஆம் தேதி) மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.
இதில், இதியாவில் முதல் இரவு நேர சர்க்கியூட் பந்தயம் சென்னையில் நடபெறவுள்ளது. இது தெற்காசியாவில் இரவு நேரத்தில் பார்முலா 4 ஸ்ட்ரீட் ரேஸ் நடத்தும் முதல் நகராக சென்னை சிறப்பு பெருகிறது.
அதன்படி, 3.5 கிமீ சுற்றவுளவு கொண்ட சர்க்கியூட்டில் இப்பந்தயம் நடக்கவுள்ளது எனவே தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, மவுண்ட்ரோடு ஆகியவற்றில் அமைந்துள்ளது.
இந்தக் கார் ரேஸ் பார்க்க மெட்ரோ ரயில் மூலம் செல்லலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் போட்டிகள் ஆரம்பிக்கிறது. மாலை 5.30 மணிக்கு சாகச நிகழ்ச்சி நடக்கிறது.
இதைக் காண பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது:
’’சென்னையில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
நாட்டிலேயே இதுபோன்ற ஒரு போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த அசாதாரண கார் பந்தயத்தைச் சென்னையில் கொண்டு வந்து, இந்தியர்களுக்கு உற்சாகமளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.