வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு ஆலயம் முழுவதும் ஒரு லட்சம் வளையகளால் விழாக் கோலம்.
ஆடி வெள்ளி என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபுரம் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய ஒரு லட்சம் வளையினால் மூலவர் வேம்பு மாரியம்மன் மற்றும் ஆலய முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு இன்று நடைபெற்றுள்ள வளையல் அலங்காரத்தை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் காலை முதல் ஆலயம் வரை தொடங்கி தற்போது நீண்ட வரிசையில் இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் லட்சம் வளையகளால் விழாக் கோலம்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleடூ வீலரில் ஹாயாக பயணம். பேலன்ஸ் தவறாமல் அமர்ந்து சென்ற டேனி
Keep Reading
Add A Comment