தமிழ்க் கடவுள் முருகன் மற்றும் வள்ளியின் வாழ்க்கை பற்றிய சம்பவங்கள் தான் வள்ளிக் கும்மி எனப்படுகிறது. இந்த வள்ளிக் கும்மி மூலம் மக்கள் தம் சமூகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இது வழிவகை செய்கிறது.
அந்த வகையில் இவ்வள்ளிக் கும்மி என்பது தமிழகத்தில் பொதுவாக அறியப்பட்டாலும் கூட, இந்த நடனம் கொங்கு வட்டாரப் பகுதிகளான கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நடனம் ஆடப்பட்டு வருகிறது.
தமிழ் நாடு பழங்கால மரபுகளின் பிறப்பிடமாகவும், பல தலைமுறைக்கு கடத்தப்பட்டு வரும், சடங்கு, சம்பிரதாயம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கடைபிடித்து வரும் நிலையில், அம்மக்களின் பாரம்பரிய, கலாச்சார, பொழுதுபோக்கு அம்சமாக பாட்டு, நடனம், தெருக்கூத்து, என்பது இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு கலை வடிவம் வள்ளிக் கும்மி ஆட்டம்.
இந்தக் வள்ளிக் கும்மி ஆட்டம் இந்துப் புராணங்கள் வேர்களை கொண்டிருக்கிறது. இந்த நடனத்தின் ஒவ்வொரு வகையும் கடவுள்களின் குறிப்பிட்ட கதையைச் சொல்வதாக மக்களால் நம்பப்படுகிறது. அதன்பரி, இந்த வள்ளிக் கும்மி ஆட்டம் என்பது, தமிழ் தெய்வமான வள்ளியின் கதையைக் கூறுகிறது. அவளது பிறப்பிலிருந்து, தமிழ்க் கடவுள் முருகன் உடனான திருமணம் வரை வள்ளி கும்மி பற்றி பெரியோர் பலரும் மனிதன் விஞ்ஞான வளர்ச்சி அடைவதற்கு முன்பு செய்த முதல் தொழில் என்பது விவசாயம், வேளாண்மை தான் . அப்போது மக்கள் குழுவாகவோ, தனித்தோ தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, தம் களைப்பு நீங்குவதற்காகப் பாடப்பட்டதுதான் கும்மி.
மக்களை மகிழ்விக்க வேண்டி ஆடி, பாடி, கதைகள் கூறுவோம், அந்தக் கதைகளும், பாடல்களும் கூட அவர்களின் மனதைப் பக்குவப்படுத்தும். முதலில் புராண, இதிகாச கதைகள் ஊர், ஊராகச் சென்று பாடப்பட்டன. இது மக்களின் கலையாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.
இப்படி கும்மியில், அரிச்சந்திர கும்மி உள்ளிட்ட கும்மியும் உள்ளது. ஆரம்பகாலத்தில், ஆண்கள் மட்டும் தான் கும்மி ஆடிவந்தனர். இதில் எதற்குப் பாகுபாடு என பெண்களும் ஆடி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவின் தாக்கத்தால் மக்கல் கிராமியக் கலையில் இருந்து விலகினர். இக்கலையைக் காப்பது நம் கடமை என்றும், இதன் மூலம், உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றும், இக்காலத்தில் ஆரோக்கியமான உணவின்மை, உடல் உழைப்பு இல்லாத உடல் உழைப்பு இல்லாத சமூகம் உருவாகி வரும் சூழலால் நோய் பாதிப்பு அதிகரித்து வருதல் ஆகியவற்றை உணர்ந்து, இதை பல இடங்களில் வள்ளிக் கும்மி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வள்ளிக் கும்மிக்கு என தனி இசைக்கருவி எதுவும் இல்லை. பாடிக் கொண்டே நடனம் ஆடுதல், அப்படி பாடும் போது, பன்னாங்கு எனப்படும் தாலக்கட்டு போடுவது முக்கியமாகும். இது ஒரு கிராமியக் கலை என்பதால் யாருக்கும் உரித்தானது அல்ல. இதை எல்லோரும் பயன்படுத்திப் பயன்பெறலாம். எந்த ஒரு கலையும் மனிதனையும் சமூகத்தையும் மேம்படுத்த வந்தது என்பதை யாரும் மறக்க வேண்டாம்.
தெருக்கூத்து, நாடகம் போன்று இந்த வள்ளிக் கும்மி கலையும் பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கப்பட்டு வந்தாலும், கும்மி என்பது கொம்மை கொட்டுதல் என இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கொம்மை தான் கும்மியாக திரிந்திருக்க்கும் என கூறப்படுகிறது.
வள்ளிக் கும்மி , முருகன் அவரது மனைவி வள்ளி அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கையைப் பாடி கும்மி ஆடுவதுதாகும். இந்தக் கும்மியில் மெல்ல நடந்து நடந்து அடிப்பது, நடந்து நின்று அடிப்பது, குனிந்து நிமிர்ந்து அடிப்பது, குதித்து குதித்து அடிப்பது, தம் கையை கொட்டி அடிப்பது, எதிரில் உள்ளோருடன் கைகள் கொட்டி அடிப்பது ஆகிய ஆறு நிலைகளில் கும்மி அடிக்கப்படுகிறது.
இந்தக் கும்மி மூலம் கொங்கு நாட்டு மக்களின் வாழ்க்கை, வரலாறு பண்பாட்டை எடுத்துரைப்பதாகவும், அடுத்த தலைமுறைக்கு தெரியப்படுத்தவும் உதவுகிறது.
இந்த வள்ளிக் கும்மியில் அதிகளவில் பெண்கள், குழந்தைகள், மாணவிகள் எனப் பலரும் பங்கேற்று வருகின்றனர். இதற்கென 30 அல்லது 40 நாட்கள் பயிற்சி பெற்று, முறையாகப் பயிற்சி பெற்ற பின், பூஜை செய்து, சலங்கை அலங்காரம் செய்து கொண்டு அரங்கேற்றம் செய்வர். இது அக்கலையைக் கற்பிக்கும் ஆசியர்களை கவுரவிப்பதாகும்.மக்களை ஒன்றுப்படுத்தும் கலையாகவும் பார்க்கப்படும். கும்மியில் பவளக்கொடி, அரிச்சந்திரன், காளிங்கராயன், முளைப்பாரி ஆகிய கலைகள் இருந்தாலும் கொங்குப் பகுதியில் வள்ளிக் கும்மி நடனம் பிரபலமாக உள்ளது.
இந்த வள்ளி கும்மி ஆடும் முன் காப்புப் பாடலைப் பாடி துவங்குவர். நமது உடலில் வலதுபுற உறுப்புகள் பணியாற்ற இடதுமூளை பயன்படுகிறது. அதேபோல்,இதுமுறை இடதுபுற உறுப்புகள் பணியற்ற்ற வலது மூளை செயல்படும். அதனால், மூளையின் செயல்பாட்டை சமன்படுத்த இந்த வள்ளிக் கும்மி பயன்படுகிறது.
குறிப்பாக வலச்சுழி செய்யும் போது இடப்புறமாக திரும்புவதும், இடச்சுழி செய்யும் போது வலப்புறமாகத் திரும்புவதும், பாடலுடன் ஆடி, உள்ளங்கை கொட்டும்போது, மனிதனின் மூளை சுறுசுறுப்பு உண்டாகிறது. தற்போது அரசு விழாக்களிலும், கோயில் திருவிழாக்களிலும் வள்ளிக் கும்மி இடம்பெற்று மக்களை மகிழ்விக்கிறது.
வள்ளிக் கும்மி பாடல் கிராமியக் கலையை என்பதைத் தாண்டி இது மனிதனின் ஆரோக்கியத்திற்கு முக்கியப் பங்காற்றுவதால் அனைவரும் இதை பயில்வது நல்லது. இக்கலை கிராமங்களைக் கடந்து, சினிமாவுக்கும் சென்றுவிட்டது. எனவே இது கிராமியக்கலை என்றிருந்தாலும், மக்களின் வாழ்வியல் கலை என்று குறிப்பிடுவது சிறந்தது.
இந்துப் புராண நம்பிக்கையின்படி, வள்ளி ஒரு முனிவரின் தெய்வீகக் காட்சியால், பெண்ணில் வயிற்றில் குழந்தையாகப் பிறந்தார். குரவர்களால் கண்டுபிடிக்கப்ப்பட்ட முருகன், குல வழக்கத்தின்படி, அங்குள்ள தானியத்தைக் காத்துக் கொண்டிருந்தபோது, விருத்த வடிவில் வள்ளியை மணந்தததாகக் கூறப்படுகிறது.
வள்ளி மற்றும் முருகன் வாழ்க்கையைப் பாடல்களாகப் பாடி கும்மி அடித்து ஆடுவதுதான் வள்ளிக் கும்மி, மற்ற கலையைப் போல் இதில் இசைக்கருவி எதுவும் இல்லை, பாடல் பாடுவர். ஒருசேர அனைவரும் ஆடுவார்கள். கால்கலில் சலங்கை அணியப்படும். பாடல்களுக்கு ஏற்ப சந்தத்திற்கு ஏற்ப நடன அசைவுகள் அமையும் போது அது இசையாக மாறும்.
நாட்டுப்புறக் கலை என்பது இந்த மண்ணில் இயல்பாகவே உருவானது. அப்போது, செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்ல, இந்தக் கலை வடிவம் பயன்பட்ட்டது. இந்தக் கும்மியில் தான் பாரதியார், சுந்திரத்திற்கு முன்பே ’’ஆனந்த சுந்திரம் அடைந்துவிட்டோம் என்று கும்மியடி’’ என்று தீர்க்க தரிசனமாகப் பாடி தீர்க்க தரிசனம் கூறினார். இதன் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்த முடியும். நவீன யுகத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சியின் தாக்கத்தால் கிராமியக் கலை அழிந்து வருவதாக கூறப்பட்டாலும்கூட, இம்மண்ணில் தோன்றிய மக்கள் கலைகளை அழியாமல் காப்பதும் நமது கடமை. மக்கல் கலையை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கப் பாடுபடும் கலைஞர்களை அங்கீகரித்துப் பாராட்டுவதும் இன்றியமையாதது.
மொழியைப் போன்றே கலையும் ஒரு நாட்டில் கலாச்சாரம், பண்பாடும், வாழ்க்கை முறை, இயற்கையோடும், கடவுளோடு கொண்டிருந்த முறை ஆகியவற்றைப் பற்றி அடுத்து வரும் தலைமுறைக்குக் கடத்த முடியும். இதில், இளைஞர்களும் எதிர்காலத் தலைமுறையினரும் ஆர்வம் காட்டுவது இக்கலையைப் புத்துணர்வுடன் இருக்கச் செய்யும்.
வள்ளிக் கும்மி – சினோஜ் கியான் கட்டுரை
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleவெற்றிக் கோட்டை – சினோஜ் கட்டுரைகள்
Keep Reading
Add A Comment