தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை கிராமத்தில் முதல் மாநாடு நடத்துகிறார்.
ஏற்கனவே செப்டம்பர் 23ஆம் தேதி முதல் மாநாடு நடக்க இருந்த நிலையில் சில காரணங்களால் மாநாடு தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில் மீண்டும் மாநாட்டுக்கு போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு, விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
போலீசார் தரப்பில் வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளில் சிலவற்றிற்கு தளர்வு அளிக்க வேண்டும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் கேட்டிருந்தார்.
இந்த நிலையில் 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவிட்டு தவெகவின் முதல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.