அமலாக்கத்துறையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
2014 ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக் காலத்தின்போது, அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி,போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, சட்டவிரோதமாக பணம் பெற்றதாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இப்புகாரை 2015 ஆம் ஆண்டு தேவ சகாயம் என்பவர் கொடுத்த நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், இதில் அவர் பெயர் இடம்பெறாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்து. அதில், செந்தில் பாலாஜி, அவரது சகோதர் அசோக்குமார், போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 40 பேர் மீது 2016 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அதே ஆண்டில் செந்தில்பாலாஜியின் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
2000 ஆம் ஆண்டு முதல் 2017 வரை அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளராக இருந்த நிலையில், , 2018 ஆம் ஆண்டு, திமுகவுக்கு மாறிய செந்தில் பாலாஜி, 2019 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு 4 வது முறையாக MLA ஆனார். இந்த ஆட்சியில் அவருக்கு மின்சாரத்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வை ஒதுக்கப்பட்டு அமைச்சரானார். அவர் சட்டவிரோதமான பணம் பெற்ற வழக்கில், 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதன்பின், திமுக வழக்கறிஞர்களால் பல முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு, கிடைக்காத நிலையில், 471 நாட்களாக சென்னை புழல் சிறையில் உள்ள செந்தில் பாலானிக்கு இன்று உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அபய் எஸ்.ஒகா மற்றும் ஏஜி மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
அதில், ஜாமீன் விவகாரங்களில் உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்றால் அது விசாரணை கைதிகளுக்காக உள்ள அரசியல் சாசன பிரிவு 21 ஐ தோற்கடிப் பதாகிவிடும் “என்று உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் முக்கிய வாக்கியமாக குறிப்பிட்டுள்ளது.
இத்தனை நாட்கள் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பித்தக்கது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளதை திமுகவின் கொண்டாடி வருகின்றனர்.