வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தி கோட். இப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, யோகிபாபு, லைலா, மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின், விசில் போடு, சின்ன சின்ன கண்கள், ஸ்பார்க் ஆகிய 3 சிங்கில் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தின் பாடல்களுக்கு இம்மாதிரி ரியாக்சன் என்றாலும் இப்படத்தின் டிரைலர் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 17 ஆம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று, இன்று வரை 4 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் இப்படத்திற்கு சென்சார் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக சென்சார் செய்யப்பட்டு, படத்தின் ஓடும் நேரம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், தி கோட் படத்தின் 4 வது சிங்கில் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்வி எழுந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் வெங்கட்பிரபு ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளார்.
அதில், மங்காத்தா படம் வெளியான தேதியிலேயே தி கோட் படத்தின் 4 வது பாடல் ரிலீஸாவது மகிழ்ச்சியாக உள்ளதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அஜித்தை மறக்காத வெங்கட்பிரபு…தி கோட் 4வது சிங்கில் அப்டேட்!
By Sinojkiyan
Cinema
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஆணுறை ஆர்டர் செய்பவர்களின் தரவுகள் லீக்!
Keep Reading
Add A Comment