ஏ.ஐ.தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் ஜியோ பிரைன் தொழில் நுட்பம் மற்றும் ஜியோ பயனர்களுக்கு100 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜை வழங்கும் ஜியோ ஏஐ கிளவுட் திட்டம் ஆகியவற்றை இன்று ரிலையன்ன் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.
இந்தியாவின் முன்னணி நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இந்த நிறுவனத்தின் 47 வது வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானி பேசியதாவது: பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமாகப் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள். 2024 பொதுத்தேர்தல் ஜனநாயகத்திற்கு அற்புதமான வெற்றியைக் கொடுத்து, உலகளவில் இந்தியாவின் நல்ல பெயரை உயர்த்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவால் பல வெற்றிகரமான மாற்றம் வரப்போகிறது என்று கூறி, ஜியோவின் அடுத்துவரவுள்ள திட்டங்களை அறிவித்தார்.
மேலும், ஏ.ஐ.தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பிரைன் தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஜியோ டிவியில் 860 சேனல்கள் வரை காணலாம், அவற்றில் இனி 7 நாட்கள் வரையிலான முடிந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட்சேமிப்பகத்தை வழங்கும் ஜியோ ஏஐ கிளவுட் திட்டம் தீபாவளி முதல் துவக்கப்படும்.
ரிலையன்ஸ் குழும்பத்தின் பங்குதாரர்களுக்கு 1.1என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
100 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜை வழங்கும் ஜியோ
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleபைபிளில் என்ன தகவல்கள் இருக்கின்றன??
Keep Reading
Add A Comment