என் எழுத்துமொழி ஒப்பந்தம்…
சில நாட்கள் கழித்து மீண்டும் என் எழுத்துத் தவத்தைத் தொடர்கிறேன்….
சில நாட்களாகத் தொடர்ந்து நலம் விரும்பிக்கு எனக் கட்டுரைகள் எழுதாமலிருந்த நான் மீண்டும் அந்த நற்செயலை இன்று முதல் தொடங்கியிருக்கிறேன்.
பல சொந்த வேலைகள், வேலை ஸ்தளத்தில் எனது அன்றாட அலுவல்கள் எனத் தினமும் இதற்கு கவனம் செலுத்துவதற்கே எனக்கான நேரம் போதுமானதாக இருந்ததென்பதால் இதைத் தாண்டி என்னால் இக்கட்டுரைகள் எழுதப் போதுமான நேரம் ஒதுக்கமுடியவில்லை. ஆனால் அது எனக்குள் ஒருவித புற்றுநோய் போன்ற அரிப்பை என்னுள்ளத்தில் ஏற்படுத்தி என்னை இத்தனை நாட்களாக எழுதாமலிருந்ததற்காய் என்னைத் தினமும் அரித்துக் கொண்டிருந்தது. தற்போது மீண்டும் கட்டுரை எழுதத் தொடங்கிவிட்டதால் அதன் அரிப்பு இனிமேல் இருக்காதென்ற ஒரு நிம்மதிச் செடி என் நெஞ்சுப்பள்ளத்தில் முளைத்துவிட்டுள்ளதாக உணர்கிறேன்.
நான் ஏற்கனவே எழுதிய என் எழுத்துச் சாசனம், காலத்தின் குரல், நலம்விரும்பிக்கு, ஆகியதொடர்களின் வரிசையில் இதுவும் இடம்பெறும் என நம்புகிறேன்.
காலம் சகலத்தையும் செய்விக்கிற ஒரு சக்தியாகயிருக்கும்போது, நம்மால் காலத்தைக் கடந்து ஒன்றையும் சாதிக்கமுடியாது; அக்குறிப்பிட்ட பருவத்தில் விதைக்கின்ற விலை காலையில் விதைத்து, மாலையில் அறுவடைசெய்விக்கிற அதிவேகத் தொழில்நுட்பங்களும் விஞ்ஞான வளர்ச்சிகளும் மாறிவரும் சூழலில் நம் மனிதத் தேவைகளையும் சமூக நடப்புகளையும் அலசிப்பார்கறேன் ஒரு உலகியல் அனுபவமாக இக்கட்டுரைகள் என் சொந்த எழுத்து நடையில் பாலத்தைத் தாங்கும் இரும்புக்கம்பிகள் போல கருத்துகளைத் தாங்கிப்பிடிக்குமென்று நான் உறுதியாக நம்புகிறேன்.
சகலத்தையும் அறிவதென்பது இயலாதவொன்று. ஆனால் சகலத்தையும் அறிய உலகப் படித்துறையில் இறங்கினாலே ….இந்த உலக அனுபவநதி வந்து தானே நம் வாழ்க்கையெனும் பாதத்தை நனைத்துவிட்டுச் செல்லும் என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகம்.
ஒவ்வொருவரும் தான் சந்திக்கிற அனுபவங்கள், நிகழ்ச்சிகளைப் பொறுத்து அவர்களின் அனுபவச்சரங்களும் கருத்தோட்டங்களும் நபருக்கு நபர் வேறுபடுவதை போலவே காலத்தினால் விளைகின்ற செய்திகளை என் எழுத்தோவியத்தில் கொண்டுவந்து உங்களின் கண்களுக்கு விருந்துவைக்க வேண்டி தன் நீலமைக்குருதியோடு என் கைககளில் துடித்தசைகிறது எனது பேனா.
என் சிந்தைக்குள் வெளிச்சம் பாய்ச்சுகிற உலக நடப்புகளும், என் கவிதைக்குச் சிறகுகள் முளைக்கவைக்கிற கற்பனைகளும், மொழித்தாயின் ஆசீர்வாத்தில் இலக்கிய நதியில் நான் பிடிக்கின்ற கவிச்சிந்தனைமீன்களும் வாசிப்பாளர்களுக்கு புதிய வாசிப்பானுவத்தைத் தரத் துடிக்கின்ற என் எண்ணதில் புதுரத்தம் பாயச்சுவதாக உங்களின் ஊக்கம் இக்காற்றோடு என் மூச்சிலும் நிறைந்திருக்கட்டும்.
காற்றிலடித்துச் செல்லமுடியாத என் உடல் எனும் கவசம் தரித்த மனமோ….சூரியன் மேற்கில் மறைந்து மறுநாள் காலையில் தன்னம்பிக்கையுடன் கிழக்கில் எழுவேன் எனத் தன் முயற்சிச் செங்கதிர்க் கைகளை பூமியில் அடித்துச் சத்தியம் செய்யும் அழகில் மயங்கி உருகிடும் ஒரு பொன்மாலைவேளையில்…
பிரியங்களுடன்
சினோஜ்
31-07-21
Ulakin Osai :
https://amzn.in/d/cKCocrO