தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி கேட்டு மனு அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அறிமுகம் செய்தார்.
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை ஆகஸ்ட் 23 ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். அப்போது கொடியின் பாடலும் ரிலீஸானது.
கொடி அறிமுக நிகழ்ச்சியில் பேசிய விஜய், இதுவரை நமக்காக உழைத்தோம். இனி தமிழ் நாட்டு மக்களுக்காக உழைப்போம். கொள்கை என்ன ? கொடிக்கான விளக்கம் என்ன? என்பதை மா நாட்டின் போது சொல்கிறேன் என்று கூறினார்.
தற்போது முதல் மாநாட்டிற்கான வேலைகள் நடந்து வருகிறது. வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி கட்சியின் முதல் மாநாடு நடக்கவுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெறவுள்ளது. மா நாடு சுமார் 150 ஏக்கர் நிலத்தில் நடக்கவுள்ளது.
இந்த நிலையில், விஜய் அறிவுறுத்தலின் பேரில், முதல் மா நாடு நட்த்தவும், பாதுகாப்பு கோரியும், அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.அலுவலகங்களில் தவெக கட்சியினர் இன்று கடிதம் வழங்கினர்.