கால்பந்து விளையாட்டிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கால்பந்து விளையாட்டின் முன்னணி வீரர் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டியானோ ரொனால்டோ.
இவர், அதிக கோல்கள் அடித்த வீரர்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களும் அதிகம். இந்த நிலையில், இவரது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல மில்லியன் பாலோயர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில் UR Christiano என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கிய அவர் சில வீடியோக்கள் பதிவேற்றினார்.
இந்த சேனல் ஆரம்பித்த 90 நிமிடங்களில் ஒரு மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். 12 மணி நேரத்தில் சப்ஸ்கிரைப் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.
எனவே ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் பெற்றுள்ள அவருக்கு யூடியூப் சார்பில் கோல்டன் பட்டன் வழங்கப்பட்டது.
24 மணி நேரத்தில் அவரது சேனலில் 1.20 கோடி சப்ஸ்கிரைபர்ஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.