யானையை எந்த வடிவிலும், கொடியிலோ, சின்னமாகவோ பயன்படுத்த முடியாது என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.
இக்கட்சிக் கொடியை இன்று அறிமுகம் செய்வதாக நேற்று அறிவித்த நிலையில், அதன்படி, இன்று காலை சென்னை பனையூரியில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
தவெக கட்சி கொடி இணையதளத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், விஜயின் கட்சி கொடிக்கு பகுஜன் சமாஜ் எதிர்ப்பு கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகக் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும்; தேர்தல் ஆணைய அறிவிப்புப்படி சிக்கிம், அசாம் தவிர எந்த மாநில கட்சிகளும் யானையைக் கொடியில் பயன்படுத்த முடியாது.

யானையை எந்த வடிவிலும், கொடியிலோ, சின்னமாகவோ பயன்படுத்த முடியாது; த.வெ.க. தலைவர் விஜய்க்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மா நில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.