385-ஆம் சென்னை நாள்: இந்தியாவின் முதன்மை நகரமாக மாற்ற அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
’’சென்னை மாநகரம் தோற்றுவிக்கப்பட்ட தினத்தை குறிக்கும் வகையில் 385-ஆம் சென்னை நாளைக் கொண்டாடும் சென்னை மாநகர மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மண் பாட்டாளிகளின் மண். பூர்வகுடி மக்களின் மண். அவர்களின் உழைப்பு தான் சென்னையை இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்த மாநகரமாக மாற்றியிருக்கிறது.
வரலாறு பதிவு செய்திருப்பதைப் போல, சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது. ஒருபுறம் சென்னை நாளை கொண்டாடும் நாம், இன்னொருபுறம், சென்னையின் பூர்வகுடிமக்களை சென்னைக்கு வெளியே அனுப்பி வைத்திருப்பது தான் நகைமுரணாகும்.
வளர்ச்சியடைந்த மாநகரமாக மாற்றியுள்ள நாம், இந்தியாவின் முதன்மை நகரமாக மாற்ற வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்’’என்று தெரிவித்துள்ளார்.
385-ஆம் சென்னை நாளையொட்டி வாழ்த்துகள் கூறிய அன்புமணி
By Sinojkiyan
News
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Next Article மாணவர்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்!
Keep Reading
Add A Comment