பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்குத் தேர்வான நிலையில், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இது நாடு முழுவதும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள்,பிரபலங்கள் வினேஷுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் 50 கிலோ எடைப்பிரிவிற்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை திருமதி. வினேஷ் போகத் அவர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வான நிலையில், இன்று காலை அவரது உடல் எடை குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் 100 கிராம் அதிகமாக உள்ளதாகக் கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது 140 கோடி இந்தியர்களின் தங்கக் கனவை தகர்த்துள்ளது என்றால் அது மிகையாகாது.
பல்வேறு போராட்டங்களைக் கடந்து, இறுதிச்சுற்று வரை முன்னேறிய வினேஷ் போகத்தின் தீரம் வியப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.
இனி இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாவண்ணம் வீரர்-வீராங்கனைகளுக்கான உடற்தகுதியை உரிய முறையில் கண்காணித்து உறுதிசெய்யுமாறு மத்திய அரசையும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தையும் வலியுறுத்துகிறேன்.
பதக்கங்கள் வரும் போகும்; நம் நாட்டின் வீரர்-வீராங்கனைகள் என்றைக்கும் நமக்கு தங்கங்கள் தான்! என்று தெரிவித்துள்ளார்.
வினேஷ் போகத்தின் தீரம் வியப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது -எடப்பாடி பழனிசாமி
By Sinojkiyan
News
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleமதுரையின் பெருமையைப் பறைசாற்றிய முதல்வர் !
Next Article புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்!
Keep Reading
Add A Comment