எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நாட்டு மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினராக் கது செய்யப்படுவது நடந்து வருகிறது. இதற்கு தமிழ்ச அரசும், எதிர்க்கட்சிகளும் இலங்கை அரசுக்குத் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தூத்துகுடி மாவட்டம் தரவைகுளம் கிராமத்தை சேர்ந்த அந்தோணி மகாராஜா என்பவர், தனக்குச் சொந்தமான விசைக்கடலில் கடந்த 21 ஆம் தேதி மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இதே அதேபோல் மற்றொரு படகில் 23 ஆம் தேதி 12 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இரண்டு விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் நெடுந்தீவு படகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 பேரையும் கைது செய்து, அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கை காங்கேசம் துறைமுகம் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.