உயர்த்தப்பட்ட, வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை திமுக தலைமையிலான விளம்பர அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்’’ என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
’’திமுக தலைமையிலான அரசு தனது மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் தமிழக மக்களை வதைத்தது போதும், இனி எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது தமிழக மக்களை வஞ்சிக்காமல் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும். மேலும், தமிழகத்தில் ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்கள் யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்ட, வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை திமுக தலைமையிலான விளம்பர அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.