அறம் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பி.ராமலிங்கம் தயாரிப்பில் , இயக்குனர் சிவம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி 2. இப்படத்தில் புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ளார்.
ஹாரல் திரில்லர் ஜார்னரில் உருவாக்கியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடக்கவுள்ளது.
இப்படத்தின் இசையமைப்பாளர் தேவா பேசியதாவது:
இதுவரை நான் எவ்வளவோ படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். ஆனால், இதுவரை ஒரு ஹாரர் படத்திற்குக் கூட இசையமைக்கவில்லை.அந்தக் குறையை இப்படம் போக்கியது. இவ்வாய்ப்பு வழங்கிய ராமலிங்கத்திற்கு நன்றி. இயக்குனர் சிவா இப்படத்தை அற்புதமாக எடுத்துள்ளார். நான் இசையமைக்க 10 நாள் ஆனது…எல்லோரும் நன்றாக நடித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.