கடந்த 15 ஆண்டுகளாக வங்கதேசத்தில் பிரதமர் பதவியில் இருந்து வந்தவர் ஷேக் ஹசீனா. இவர்,வங்கதேசம் எனும் நாட்டை நிறுவனர் முஜிபுர் ரகுமானின் மகள் ஆவார்.
இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை வங்கதேச பிரதமரானார்.
சமீபத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ராணுவம் இடையிலான மோத்ல் கலவரமாக உருவெடுத்தது. இதையடுத்து டாக்காவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஷேக் ஹசீனாவிற்கு எதிராகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடுனடத்தப்பட்டது. இதில், 100 பேர் பலியகினர்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில், இதையும் மீறி இன்று காலையில் டாக்காவில் மாணவர் அமைப்பினர் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில், நாட்டின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவ அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர், ராணு தளபதி நாட்டு மக்களிடையே உரையாற்றினர்.
அப்போது, மக்களின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி, 45 நிமிடம் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா பதவியை ராஜினிமா செயதுவிட்டு, ராணு ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து வெளிநாட்டிற்குத் தப்பியோடியதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும் இந்தியாவில் இருந்து சாதகமான பதில் வந்ததால் டாக்காவில் இருந்து ஹசீனா புறப்பட்டதாக கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனா ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
தற்போது, போராட்டக்காரர்கள் பிரதமர் ஷேக் ஹசீனாவில் மாளிகைவிட்டு வெளியேறிய நிலையில் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு இலங்கையில் நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
Sinojkiyan