*திண்டுக்கல்லில் வெடிகுண்டு துப்பறியும் லீமா என்ற நாய் 8 ஆண்டுகள் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றது.*
*பணி ஓய்வு பெற்ற துப்பறியும் நாய்கள் கடைசி வரை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி – திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பேட்டி*
திண்டுக்கல், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் துப்பறியும் நாய் படை பிரிவில் பணிபுரிந்த லீமா என்ற நாய் பணி நிறைவு விழா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் இன்று நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மோப்பநாய் லீமாவிற்கு மாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து நன்றியை தெரிவித்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது,
“திண்டுக்கல் துப்பறியும் நாய் பிரிவில் நான்கு துப்பறியும் நாய்கள் உள்ளன இதில் 2 நாய்கள் வெடிகுண்டு மோப்ப நாய்களாகவும் 2 நாய்கள் குற்றச் செயல்கள் கண்டுபிடிக்க கூடிய மோப்ப நாய்களாகவும் பயிற்சி அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில், லீமா என்ற நாய் திண்டுக்கல் காவல்துறையில் 45 நாட்களில் சேர்ந்தது 8 ஆண்டுகளாக வெடிகுண்டு கண்டுபிடிப்பதில், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்தது.
தற்போது 8 ஆண்டுகள் பணிபுரிந்த லீமா என்ற நாய்க்கு மருத்துவரின் சான்றிதழ் பெற்று பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த லீமா பணி ஓய்வு பெற்று இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் காவல்துறையினர் முறையாக பராமரிப்பு செய்யப்படும்.
இதுபோன்று காவல் துறையினரிடம் பணிபுரியும் துப்பறிவு நாய்களுக்கு என்று நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு நன்றி. இதன் மூலம் பணி ஓய்வு பெற்ற பிறகும் லீமா – வை முறையாக பராமரிக்க முடியும்
மேலும் தற்போது திண்டுக்கல் காவல் துறையினருக்கு புதிதாக நாய் ஒன்று வாங்கப்பட்டு அதற்கான பயிற்சி நிலையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு துப்பறிவு பிரிவில் சேர்க்கப்பட உள்ளது.” என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஆயுதப்படை டிஎஸ்பி. ஜோசப்நிக்சன், மாவட்ட குற்ற பதிவேடு கூடம் டிஎஸ்பி.சிவக்குமார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன், மோப்பநாய் படை பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
8 ஆண்டுகள் பணிபுரிந்த லீமா என்ற நாய்க்கு ஓய்வு
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஇளைஞருக்கு செருப்பை காட்டி எச்சரித்த பெண்மணி
Keep Reading
Add A Comment