இந்த வீட்டில் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இந்த லட்சணத்தில் சி சி கேமரா எதற்கு. குடித்த தண்ணீருக்கு இருபது ரூபாய் வைத்து செல்கிறேன். எடுத்து கொள் என்று திருட சென்ற வீட்டில் சி சி கேமரா முன் சைகை காண்பித்து சென்ற திருடன்.
தெலுங்கானா மாநிலம் ரங்காராநட்டி மாவட்டத்தில் உள்ள மகேஸ்வரம் நகரில் இருக்கும் ஒரு வீட்டிற்கு நேற்று இரவு முகமூடி, தலையில் தொப்பி ஆகியவற்றை அணிந்த ஒரு திருடன் திருடுவதற்காக சென்றான்.
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடன் வீடு முழுவதும் தீவிரமாக தேடி பார்த்தும் திருடனுக்கு அந்த வீட்டில் ஒன்றும் கிடைக்கவில்லை.
அதேபோல் பணமாக ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை.
இதனால் மன வேதனை அடைந்த அந்த திருடன் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா முன் வந்து ஒரே ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இந்த லட்சணத்தில் வீட்டில் சிசிடிவி கேமரா எதற்காக பொருத்தி இருக்கிறீர்கள் என்று கேட்பது போல் சைகை காண்பித்து விட்டு சென்றான்.
பின்னர் மீண்டும் வந்த அந்த திருடன் வீட்டில் இருந்த பிரிட்ஜை திறந்து அதில் இருந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தான்.
பின்னர் அங்கிருந்து டேபிள் மீது இருபது ரூபாயை வைத்த அந்த திருடன் குடித்த தண்ணீருக்கும் ஒரு 20 ரூபாய் வைத்து விட்டேன். உங்கள் வீட்டில் இருந்து ஒன்றுமே எடுத்துச் செல்லவில்லை என்று சி சி கேமரா முன் சைகையால் கூறி அங்கிருந்து சென்று விட்டான்.
வேலை விஷயமாக வெளியூர் சென்று இருந்த வீட்டின் உரிமையாளர் இன்று காலை வந்து பார்த்தபோது யாரோ பூட்டை உடைத்து கதவை திறந்திருப்பது தெரிய வந்தது.
சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது முகமூடி திருடன் வந்தது, வீடு முழுவதும் தேடிப் பார்த்தது, ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை குடித்த தண்ணீருக்கும் பணம் வைத்து செல்கிறேன் என்று அவன் சைகையால் கூறி சென்றது ஆகியவை தெரியவந்தது.
குடித்த தண்ணீருக்கு இருபது ரூபாய் வைத்த திருடன்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஎம்.ஆர்.விஜயபாஸ்கரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி
Keep Reading
Add A Comment