பொள்ளாச்சி அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.பொள்ளாச்சி வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் ஆழியாரை அடுத்து மலையடி வாரத்தில் அமைந்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஆழியார் அதன் சுற்று வட்டார பகுதி சிற்றாடைகளில் இருந்து வரும் நீர் வரத்தால் ஆற்றுக்கு நேற்று நள்ளிரவு முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலுக்கு அதிகளவு வழிபாடு செய்ய வருகை புரிவார்கள் இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Next Article இளைஞருக்கு செருப்பை காட்டி எச்சரித்த பெண்மணி
Keep Reading
Add A Comment